ஊடக பிரிவு
பாராளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றை திரிபுபடுத்தி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களுடைய SLMCவெளிச்சம் அப்பட்டமான பொய்களை போட்டு தனது சிறப்புரிமையை மீறியுள்ளதாக இன்று காலை பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாட் குற்றம் சாட்டினார் .
சமூக வலையத்தளங்களை பயன்படுத்தி இவ்வாறான பொய்யான செய்திகளையும் இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்களையும் பிரசுரிப்பவர்களுக்கெதிராகவும் சமூக வலைத்தளங்களுக்குகெதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறும் சரியான உண்மையான தகவல்களை பிரசுரிக்குமாறும் உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே இவ்வேண்டுகோளை விடுத்தார்.
மன்னார் முல்லைத்தீவு, வவுனியா புத்தளம் மாவட்டங்களில் உள்ள பழைமைவாய்ந்த மற்றும் மக்கள் மீளக்குடியேறியுள்ள கிராமங்களில் நீரின்றி மக்கள் அவதிப்படுவதாகவும் எனவே இதற்கான திட்டங்களை வகுத்து மக்களுக்கு நீர் வசதிகளை ஏற்படுத்துமாறு அவர்வேண்டுகோள் விடுத்தார்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் இன்னும் இழுபறி நிலையில் இருப்பதாலும் நகர நிர்மாணத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதில் கூடிய கவனம் செலுத்தி இந்த விவகாரத்தை சுமூகமாமதீர்தது வைக்குமாறும் அதே போன்று கொழும்பு கிரேன்ட்பாஸ் பள்ளி விவகாரத்தையும் தீரத்துத்தருமாறு அமைச்சர் வேண்டினார்,
வடகிழக்கில் உள்ளூராட்சி சபைகள் பலவற்றை புதிதாக அமைக்குமாறும் சனத்தொகை அதிகமாக உள்ள பல சபைகளை பிரித்து மக்களின் வசதிகருதி தனித்தனியான சபைகளை அமைக்குமாறும் நாம் கடந்தகாலங்களில் விடுத்துவந்த கோரிக்கைகளை ஏற்று கொண்டமைபற்றி அவர் தனது உரையில் நன்றி தெரிவித்ததுடன் இவ்வாறான சபைகளை அமைக்கும் போது எந்த ஒரு இனத்துக்கோ எந்தவொரு பிரதேசத்துக்கோ, எந்த ஒரு ஊருக்கோ அநியாயம் இழைக்கப்படாது சமத்துவத்தை பேணுமாறும் அவர் வலியுறித்தினார்.