சுஐப் எம் காசிம்.
மன்னார் என்பது மாண்புறு மாநிலம்
உன்னத நகரம் உயர்வளம் கொண்டது
கடல்வளம் நிலவளம் கார்தரும் நீர்வளம்
நெல்வளம் மற்றும் பல்வளம் கொண்டது.
மன்னார் நகரின் அண்மிய பதியாய்
மலர்ந்த கிராமம் தாரா புறமாம்
இஸ்லா மியரே வாழ்ந்தனர் அங்கு
இனியராய் எவர்க்கும் உதவிடும் மக்கள்
அங்கே வாழ்ந்த அரும்பெரும் குடும்பமாம்
அன்பர் பதியுதீன் பெற்றநற் பேறாய்
பிறந்தனர் றிஷாட்எனும் பெருமைசேர் மைந்தர்
பெற்றவர் பெரியோர் அனைவரும் மகிழ்ந்தனர்
வளரும் பயிரை முளையிலே காணும்
வகையிலே கெட்டியாய் சுட்டியாய் வளர்ந்திட
இளமைக் கல்வியை அல்மினா அளித்தது
அடுத்து சாஹிரா மொறட்டுவைப்பல்கலை
எந்திரிப் பட்டமும் பதவியும் கிடைத்தபின்
இல்லறம் அமைந்தது நல்லற மாக
நற்குடி மகளாய் நாயகி அமைந்தார்
நல்ல குடும்பமாய் வாழ்ந்தனர் அவர்கள்
அரசியல் துறையில் இறங்கிய இளவல்
அதிலே பற்பல உயர்ச்சிகள் கண்டார்
அரசியல் தொடர்பால் பிரபலமாகி
தனி வழி நின்றே அரசியல் செய்தார்
உடன்பிறப் பானோர் இடம் பெயர்ந்திடவே
உதறி யெறிந்தார் கட்சி விலங்கை
அரசுடன் இணைந்தே பிரபல அமைச்சராய்
ஆற்றிய பணிகள் அநந்தம் கண்டீர்
அகதிகள் வாழ்வில் பசுமையைக் காண
அல்லும் பகலும் உழைத்த நம்அமைச்சரின்
அரிய சேவையை வடபுல மக்கள்
மறப்பரோ என்றும் நன்றி செலுத்துவர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
அமைத்தார் புதிய கட்சியை அமைச்சர்
அந்தோ மக்கள் சாரி சாரியாய்
அதிலே இணைந்தனர் வளர்ந்தது கட்சி
மீள்குடி யேற்றம் வன்னியில் தொடங்கவே
மெத்தப் படித்தோர் குழப்பினர் குட்டையை
தோளைக் கொடுத்தவர் துயரம் தீர்த்தவர்
துணிவுடைச் செம்மல் நம்றிஷாட் என்போம்.
வயதில் குறைந்த அரசியல் வாதி
வயதில் இளைய கபினட்; அமைச்சர்
சரித்திரம் படைத்த சான்றோன் நம்றிஷாட்
சரித்திர புருஷனாய் வாழ்ந்திட வாழ்த்துவோம்
பொன்னின் செல்வன் பிறந்தநாள் இன்று
எண்ணற்ற நலன்கள் பெருக எம் பிரார்த்தனை
(44வது பிறந்த தினம் 27 – 11 – 16)