அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்கான்சின் மாகாணத்தில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது மோசடி என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்கள் முழுவதிலும் டிரம்ப் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், விஸ்கான்சின் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பசுமை கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்ட ஜில் ஸ்டெயில் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மனு அளித்துள்ளார். இதற்கு ஹிலாரி தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில்,
மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோருவது என்பது மோசடி. தேர்தல் முடிவிற்கு சவால் விடுவதையும்அல்லது குறை கூறுவதையும் விட்டு, அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதிக்க வேண்டும். தேர்தல் பற்றி மக்கள் பேசிவிட்டனர். தேர்தலும் முடிந்து விட்டது. தேர்தல் தோல்வியை ஹிலாரியும் ஒப்பு கொண்டுவிட்டார் என்றார்.