இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைக்காக முழுமையான ஆதரவை வழங்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
காலி நகர சபையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் ஐநா மனித உரிமை சபையில், இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நீக்கி கொள்வது குறித்து, டொனால்ட் ட்ரம்ப் அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதன் ஊடாக மனித உரிமை பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதனை நிறைவேற்ற கூடும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.