செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது!

செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டது. இனிமேல், மக்கள் வங்கிக் கணக்குகளில் மட்டும் அந்த ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய, மாநில அரசு மற்றும் ஊராட்சிப் பள்ளிகளுக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் வரையும், அரசுக் கல்லூரிகள் கட்டணம், பிரீபெய்டு மொபைல் கட்டணம் 500 ரூபாய் வரையும், நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் 500 ரூபாய் வரை வாங்கப்படும் பொருட்கள் ஆகியவையும் 500 ரூபாய் நோட்டுக்களாக செலுத்தலாம்.

குடிநீர் மற்றும் மின் கட்டணங்களையும் செலுத்தலாம். 

வெளிநாட்டுப் பயணிகள், வாரத்துக்கு 5000 ரூபாய் அளவுக்கு வெளிநாட்டுக் கரன்ஸிகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.