மத்திய அமெரிக்கவை பெரிய சூறாவளி ஒன்று தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டோவா எனப் பெயரி்டப்பட்டுள்ள குறித்த சூறாவளியானது மணிக்கு 90 மைல்கள் என்ற வேகத்தில் கரிபியன் கடற் பரப்பில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பபடுகின்றது.
இதேவேளை குறித்த சூறாவளியானது கொஸ்ராறிக்கா மற்றும் தெற்கு நிகரகுவா பகுதிகளில் நாளைய தினம் (24) தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சூறாவளியின் மூலம் பனாமாவில் தற்போது வரை 4 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஓட்டோ புயல் சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது கடற்கரைக்கு அப்பால் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இன்று, (வியாழக்கிழமை) இந்த சூறாவளி வடக்கு கோஸ்டா ரிகா மற்றும் தெற்கு நிகராகுவாவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (இன்று மற்றும் நாளை) நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களை மூடிவிட கோஸ்டா ரிகா நாட்டின் அதிபர் லூயிஸ் கீல்யார்மோ சாலீஸ் உத்தரவிட்டுள்ளார்.
புயலின் நேரடி பாதையில் அமைந்திருக்கும் வீடுகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.. ஆனால், மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தங்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.