கல்வியே ஒரு சமூகத்தின் உயிர் நாடி, கற்றவனும் கற்காதவனும் சமமற்றவர்கள் என இஸ்லாம்
கூறுகின்றதே அன்றி பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று எங்கும் கூறவில்லை.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்த JVP பாராளுமன்ற உறுப்பினர் பிமல்
ரத்நாயக அவர்கள் இஸ்லாமிய கலாசாரம் மற்றும் தனியார் சட்டம்முஸ்லிம் பெண்களின் கல்விக்குத்
தடையாக உள்ளது என்ற ஒரு தவறான கருத்தை முன்வைத்தார். அதனை நான் முற்றாக மறுப்பதாகவும்
ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் கட்டாம் கல்வி கற்க வேண்டும் என்பதையே இஸ்லாம்
வலியுறுத்துகின்றது எனவும் அவர் தனதுரையில் பதிலளித்தார்.
அத்துடன் பாகிஸ்தான் முஸ்லிம்கள் பற்றிய அறிக்கைகளை இலங்கை முஸ்லிம் பெண்களுடன்
தொடர்புபடுத்த அவர் எடுத்த முயற்சி பொருத்தமற்றதாகும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு