அஷ்ரப் ஏ சமத்
இந்த நாட்டில் உள்ள நான்கு மதங்களே உள்ளன. மதங்களுக்கிடையில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் செயற்பாடுகள் மற்றும் சமுக வலையத் தளங்களில் வெயியிடப்படும் கருத்துக்களுக்கும் இக் கருத்துக்களை பரப்புவா்களுக்கு எதிராக நீதியமைச்சினால் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு குற்றவியல் சட்டக் கோவையில் உள்ள பிரிவின்படி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
நேற்று பாராளுமன்றத்தில் பொதுபலசேன மற்றும் அதி போக்குடைய பிக்குமாருகளுடன் மேற்படி விடயங்களை பேசியுள்ளேன். அதே போன்று இன்று முஸ்லீம் சமுகத்தின் பிரநிதிகளுடன் சந்தித்தாக நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சா் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தாா்.
இன்று(23) நீதியமைச்சில் நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச தலைமையில் -முஸ்லீம்களது மத விடயங்கள் சம்பந்தமாக முஸ்லீம் கவுண்சில் பிரநிதிகள், அத்துடன் அகில இலங்கை ஜம்மியத்துல உலமா பிரநிதிகள் முன்னா் கொழும்பு மேயா் ஆசாத் சாலி ஆகியோறுடனான சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
அமைச்சா் விஜயதாச மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் ,
மதங்களுக்கிடையில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் ஊா்வலங்கள் சந்திகளில் கூடி பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது. இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு சகல மதங்களையும் அனுஸ்டிப்பவா்களுக்க உரிமை உண்டு. மதங்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளளை அந்தந்த மத பெரியாா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு இரண்டு சாராரும் தீா்த்துக் கொள்ள முடியும். இவ் விடயம் சம்பந்தமாக இந்த நாட்டில்
குற்றவியல் சட்டக் கோவையில் உள்ள பிரிவின்படி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது அமைச்சரவையில் உள்ள நான்கு மத விவகார அமைச்சா்கள் உள்ளனா். அவா்களுடனான சந்திப்பும் பாராளுமன்றத்தில் நடைபெறும். இந்த அரசாங்கம் சகல இன மதங்களின் நல்லிணத்தை பாதுகாக்கும். எனவும் அமைச்சா் அங்கு தெரிவித்தாா்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமாவின் ஊடகச் செயலளாா் மொலவி பாசில் பாருக் – கருத்து தெரிவிக்கையில் –
இஸ்லாம் மாா்க்கம் அன்நிய மதங்களை கௌரவித்து நடந்து கொள்ளும் மாா்ககம் முஸ்லீம்களுக்கு உணவு, உடை அவா்களது கலாச்சாரம் என ஒரு சீரிய முறைமை உண்டு. சிங்கள மொழி மூலமான ஜிகாத், ஹலால் உணவு, பர்தா, போன்ற நுால்கள் ஒரு தொகுதியினை அமைச்சாிடம் கையளிக்கப்பட்டது.
முஸ்லீம் கவுன்சில் தலைவா் என்.எம். அமீனும் அங்கு கருத்து தெரிவித்தாா்.