ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ரிக்டரில் 7.4 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. புக்குசிமாவுக்கு அருகாமையில் 20 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் காரணமாக டோக்கியோ வரை நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாகவும், 2 பேர் காயடைந்தள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் காரணமாக புக்குசிமா மற்றும் மியாகி பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புக்குசிமாவில் அணு உலை அமைந்துள்ளதால் சுனாமி ஏற்பட்டால் பெரும் விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.