வடக்கில் தமிழ்த் தலை­மைகள் சுதந்­தி­ர­மாக நட­மாடக் கார­ணமும் இரா­ணு­வத்­தி­னரே : மஹிந்த ராஜபக்சே !

mahinda_27

இரா­ணு­வத்­தி­னரை பலி­யிட்டு வெற்றி கொண்ட பாரிய கடற்பரப்­பி­னையும் இரண்டு மாகா­ணங்­களையும் மீண்டும் திருப்பிக் கொடுக்க ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

வடக்கில் தமிழ்த் தலை­மைகள் சுதந்­தி­ர­மாக நட­மாடக் கார­ணமும் இரா­ணு­வத்­தி­னரே. அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த ஒரு­வ­ரி­டமும் அனு­மதி பெற வேண்­டிய தேவை தமக்கு இல்லை எனவும் தெரி­வித்தார்.

கொழும்பு விகார மஹாதேவி பூங்கா வளா­கத்­தில நேற்று இடம் பெற்ற யுத்த வெற்றி நிகழ்வின் போதே அவர் மேற்­கண்டவாறு தெரி­வித்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்தபாய ராஜ­பக் ஷ, முன்னாள் ஆளுனர் அலவி மௌலானா மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச, டலஸ் அழகப்­பெ­ரும, தினேஷ் குண­வர்த்­தன, டி.பி.ஏக்க­நா­யக்க, நாமல் ராஜ­பக் ஷ, கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்­டி­ருந்­தனர்.

நிகழ்­வு சுதந்­தி­ரத்தின் தீப­வேலி என்று பெய­ரிடப்பட்­டி­ருந்த அதே­வேளை இந்­ நி­கழ்வின் போது பெரும் எண்­ணிக்­கை­யி­லான கலை­ஞர்கள் கலந்து கொண்­டி­ருந்­த­மையும் குறிப்­பிடத்தக்­கது.

இதன் போது தொடர்ந்தும் உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி,

எண்­ணி­ல­டங்­காத இரா­ணு­வத்­தி­னரை பலி­யிட்டு வெற்றிகொண்ட பாரிய கடல் பரப்­பி­னையும் இரண்டு மாகா­ணங்­களையும் மீண் டும் திருப்பிக் கொடுக்க ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இது­வ­ரையில் புலி­க­ளிடம் அடி­ப­ணிந்து கொண்­டிருந்த அர­சாங்கம் ஒன்­றி­னையே காண முடிந்­தது. அதற்கு மாறாக தேசியக் கொடியை கையி­லேந்தி சுதந்­நிர காற்றை சுவா­சிக்க செய்­தது எமது அர­சாங்­கமே.

நாம் ஒரு­போதும் நாட்டை காட்டிக் கொடுக்­க­வில்லை நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒப்­பந்­தங்­களும் செய்­ய­வில்­லலை எந்த ஒரு வெளிநாடும் எமது நாட்­டினை தீண்­டவும் ஒரு போதும் அனு­மதி வழங்­க­வில்லை.

உலக நாடுகள் உணவுப் பஞ்சம். நிதிப்­பற்­றாக்­குறை போன்­ற­வற்றை எதிர்நோக்­கிய போதும் அவ்­வாறான நிலை­யினை எமது நாட்­டவர் காண இடம் கொடுக்­காது யுத்­த­த்தி­னையும் எதிர்கொண்­டது எமது அர­சாங்கம் மாத்­தி­ரமே. ஆனால் இன்று அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் கொடுக்க பணம் இல்லை என்­கி­றது புதிய அர­சாங்கம். எமது அரசின் செயற்­பா­டு­க­ளுடன் புதிய அரசின் செயற்­பா­டு­களை ஒப்­பிட்டுப் பார்த்தால் வெட்­கப்­பட வேண்­டிய நிலை புதிய அர­சுக்கு ஏற்­படும்.

அன்று வெளிநா­டு­களில் உள்ள அதி­வேக வீதி­க­ளையும் பல­­மாடிக் கட்­ட­டங்­க­ளையும் கண்டு வியந்த எமது நாட்டு மக்­க­ளுக்கு அவற்றை சொந்த நாட்டில் காணக்­கூ­டிய சூழலை எமது அர­சாங்­கமும் இரா­ணு­வமும் தான் உரு­வாக்கிக் கொடுத்­தன.

எதிர்காலத்தில் இலங்­கையில் பிரி­வினை வாதம் உரு­வா­கவும் நாட்டின் தேசி­யத்தை சீர் குலைக்­கவும் இனி எந்த ஒரு அமைப்­பிற்கும் நாம் இட­ம­ளிக்கப் போவதுமில்லை. அதே­வே­ளை இன்று வடக்கில் தமிழ் மக்­களும் தமிழ்த் தலை­மை­களும் சுதந்­தி­ர­மாக நட­மா­டக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கி­யதும் வட­ப­குதி மாண­வர்­களின் கரங்­களில் இருந்த ஆயு­தங்­க­ளுக்கு மாறாக அவர்­களை புத்­தகம் ஏந்தச் செய்ததும் இராணுவத்தினரே.

அதைவிடுத்து இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கக் காரணமான ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளை அஞ்சலி செய்வது அவசியமற்றது. அதே வேளை இராணுத்தினரின் தியாகங்களை மறப்பதும் வெட்கப்பட வேண்டிய செயல் என்றார்.