அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இதன் தாக்கும் தீவிரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஏற்படவுள்ள பேராபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் சில வாரங்களில் இவ்வாறான தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின், சென்என்ரியாஸ் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை முதன்மைப்படுத்தி இந்த நில அதிர்வு ஏற்பட கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
எட்டுக்கும் அதிகமான ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்படியொரு நில அதிர்வு ஏற்பட்டால் அது அமெரிக்கா முகம் கொடுக்கும் பாரிய பாதிப்பொன்றாக கருதப்படும்.
அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை ஏற்படாத வகையிலான சுனாமி நிலைமை ஒன்று ஏற்படும் ஆபத்தொன்று காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள தேவையான பாதுகாப்பு குழுவொன்று தயார் நிலையில் உள்ளது. இதற்காக நிவராண சேவையாளர்கள் 1200 பேர் கொண்ட படை ஒன்று தற்போது தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர விமான சேவை மற்றும் நிவாரண சேவைக்காக மேலும் சில குழுகளை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் என பல ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தினை, அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.