நேற்று முன்தினம் பாராளுமன்ற வரவு செலவு விவதாத்தின் போது நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச – இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் 32பேர் ஜ.எஸ்.எஸ் தீவிராத இயக்கத்தில் உள்ளதாக உயர் மன்றமான பாராளுமன்றத்திலேயே கருத்து தெரிவித்துள்ளார் . இவரின் உரை சம்பந்தமாக நாளை (21) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள அரச குழுக் கூட்டத்தின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நீதியமைச்சரின் இவ் கருத்து சம்பந்தமாக நான் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பிணர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார் .
அவா் தொடர்ந்து தகவல் தருகையில் –
அமைச்சா் விஜயதாச ராஜபக்ச தெற்கில் உள்ள சில தீவிர போக்குடைய பிக்குகளுக்கு தீனி போடுவதாகவே இவரது இக் கருத்து அமைந்துள்ளது.. இந்த நல்லாட்சி அரசினை ஏற்படுத்துவதற்கு சிங்கள மக்களோடு 95 வீதமான தமிழ், முஸ்லீம் மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினார்கள். நாட்டில் நடைபெற்ற கொடிய 30 வருட பயங்கரவாதத்தினை அழித்த்துக் காட்டிய பாதுகாப்புப்படையினர்கள் புலனாய்வு தகவல்களை விட நீதி அமைச்சருக்கு எவ்வாறு எங்கிருந்து அவா் இந்தத் தகவளை பெற்றார் . என்பதனை கேடக விரும்புகின்றேன்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடுவளை, கொட்டாவை ,மகரகம வாழ் பௌத்த மக்களது வாக்குகளை பெற்றவர் அவர் களை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு ஒரு இனத்தினை பற்றி பேசினாரா? அல்லது தீவிர போக்குடைய பௌத்த குருமார்களது நிகழ்ச்சி நிரலில் இருந்து செயற்படுகின்றாரா ? என்பது தெரியவில்லை. இவர் இதற்குரிய சரியான தகுந்த ஆதாரங்களை நாட்டு மக்களுக்கு விரிவாக தெரிவிக்க வேண்டும்.
கடந்த வாரமாக மீண்டும் முன்னைய ஆட்சியில் தாங்களே பொலிஸ் காரர் போன்று மகிந்த ராஜபக்சவின் செல்லப் பிள்ளைகளாக இருந்த சில பொளத்த குருக்கள் இனங்களிடையே மீண்டும் குரோதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் . இவர்களும் கூட்டு எதிர் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இயங்குகின்றனர் . நேற்று இரவு பெப்லியானவில் நடைபெற்ற ” பெசன் பக்” நிறுவனத்தில் களஞ்சியசாலை எதிர்ப்பில் அங்கு பொலிசார் நடந்து கொண்ட விதம், அத்துடன் அங்குள்ள ஊழியர் ஒருவரை அவர்கள் தாக்கிய சம்பவம் பற்றி உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டும். இதுவும் முஸ்லீம்களது வர்த்தக நடவடிக்கை நசுக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்பதையும் உடன் பொலிசார் கண்டறிந்து இதனை சம்பந்தப்பட்டவர் கள் சட்டத்தின் முன் நிறுத்தல் வேண்டும். எனவும் பாராளுமன்ற உறுப்பிணர் மரிக்கார் தெரிவித்தார் .