பாறுக் ஷிஹான்
கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வடமாகாணங்களில் குறிப்பாக சிலாவத்துறை மன்னார் செட்டிகுளம் கோவில்குளம் இராசேந்திரகுளம் பொன்னாவரசங்குளம் அடம்பன் தச்சன்குளம் மாங்குளம் கனகராஜன்குளம் ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுள்ளனர்.
இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட குறித்த நெடுங்கேணி செட்டிகுளம் கிளிநொச்சி இளவாலை போன்ற பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேரையும் வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உதவி பொறுப்பதிகாரி பிரசாத் சிறிவர்த்தன தலைமையில் செயற்பட்ட குழுவினரின் தீவிர கண்காணிப்பின் பின்னர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் உட்பட கொள்ளையில் ஈடுபட பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கரவண்டி பல்சர் ரக மோட்டார் சைக்கிள் கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் வடமாகாணத்தில் பல காலமாக கொள்ளை மற்றும் குற்றச்செயல்களில் இக்குழுவினர் ஈடுபட்டுடதுடன் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து பொதுமக்களை அச்சுறுத்தி இரவு வேளைகளில் முகத்தை துணியால் கட்டி வீடுகளுக்குள் சென்று தங்க நகைகள் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்கள் கொள்ளையடித்த நகைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக பல கோணங்களில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.