க.கிஷாந்தன்
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதை நடைமுறைப்படுத்த தோட்ட நிர்வாகற்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 17.11.2016 அன்று அட்டனில் போராட்டம் கலந்த மக்கள் பேரணி ஒன்றினையும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டத்தினையும் நடத்தியது.
காலை 11.00 மணியளவில் அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய பேரணி 11.45 மணியளவில் அட்டன் டீ.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தை சென்றடைந்தது.
இப்பேரணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட கமிட்டி தலைவர், தலைவிகள், காரியாலய உத்தியோகத்தர்கள், காங்கிரஸின் இளைஞர் அணி பிரிவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை இப்பபேரணியில் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், முன்னால் மத்திய மாகாண அமைச்சர்களான எஸ்.அருள்சாமி, அனுஷியா சிவராஜா உட்பட தற்போதுள்ள மாகாண சபை அமைச்சர்களான ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன் ஆகியோருடன், மத்திய மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜதுரை என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் கலந்து கொண்ட தலைவர்கள் நடைபவனியாக அட்டன் டீ.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தை வந்தடைந்தததும், இதில் பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கும், கம்பனிகளுக்கும் எதிரான சுலோகங்களை ஏந்திய வண்ணம் உரிமைகள் தொடர்பில் கோஷம் எழுப்பியவாறு கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.