ஜனாதிபதி செயலகத்துக்கு உரித்தான பல ஆவணங்கள், பொரளையில் உள்ள பழைய இரும்பு மற்றும் பத்திரிகை கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆவணங்கள் 320 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நீல நிற காரில் வந்தவரே இந்த ஆவணங்களை விற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
இந்த ஆவணங்களில், 2012 ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உணவு விநியோகம் செய்தமைக்கான பற்றுச்சீட்டுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான ஆவணங்கள் குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் பல தடவைகள் விற்றுள்ளதாக பழைய இரும்பு மற்றும் பத்திரிகை கடையின் வர்த்தகர் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.