வங்கி கணக்குகளில் திடீரென உயரும் டெபாசிட்டுகளை மத்திய அரசு கண்காணிக்கும் : நிதிமந்திரி

பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் ஜீரோ பேலன்சுடன் கூடிய வங்கிக் கணக்குகளை கோடிக்கணக்கான மக்கள் தொடங்கினர். அதில் பல கணக்குகள் வரவு-செலவு இன்றி துவக்க நிலையிலேயே உள்ளன. தற்போது மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை இந்த ஜன்தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து பொதுமக்கள் வரவு வைக்கின்றனர். அத்தகைய கணக்குகளில் ஜீலோ பேலன்சில் இருந்து திடீரென அதிக அளவில் பணம் வரவு வைக்கப்பட்டால் அதனை அரசு உன்னிப்பாக கண்காணிக்க உள்ளது. 

201502091219509644_some-new-names-have-been-revealed-whose-veracity-would-be_secvpf

இதுபற்றி நிதிமந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறுகையில், “ஜன்தன் வங்கி கணக்குகளில் திடீரென அதிக பணம் வரவு வைக்கப்படுவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. அப்படி இருந்தால் அது துஷ்பிரயோகம். முறையற்ற வழியில் பணம் டெபாசிட் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்கும். 

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்வோரை சட்ட அமலாக்க ஏஜென்சிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. கணக்கில் வராத பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வது மற்றும் நகைகள் வாங்குவது, ரூபாய் நோட்டுக்களை குப்பைத் தொட்டியில் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் கண்காணிக்கிறது.” என்றார்.