இரும்பு சத்து குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைந்து ரத்த சோகை உண்டாகிறது. உங்களுக்கு இரும்பு சத்து குறைவு என்பதை எப்படி அறிந்து கொள்ளலாமென தெரியுமா?
ஸ்பூன் போன்று நகம் வளைந்து மேல் நோக்கி இருந்தால் அது இரும்பு சத்தின் அறிகுறி. இந்த அறிகுறிக்கு கொய்லோனிசியா. ஆனால் அவ்வாறு வளைந்த நகம் அது மற்ற வியாதிக்கும் அறிகுறியாக இருக்கலாம். பரிசோதனையில் மட்டுமே தெரிய வரும்.
சாதாரணமாக குளிர்காலங்களில் உதடு வெடிப்பது இயல்பானதே. ஆனால் ஒரு சிலருக்கு எப்போதும் உதடு வெடித்தபடியே இருக்கும் இரும்பு சத்து போதாமையின் அறிகுறிதான் இது. இதற்கு ஆங்குலார் செய்லிடிஸ் என்று பெயர்.
நாக்கு வீக்கமாகவும் பளபளப்பாகவும் இருந்தால் அது இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறி. இதற்கு பெயர் அட்ரோஃபிக் க்ளாஸிடிஸ் என்று பெயர். இந்த அறிகுறியில் நாக்கு மிருதுவாகவும் நைசாவும் இருக்கும்.
பொதுவான அறிகுறிகளில் ஒன்று. ஐஸ் கட்டியை பார்த்து தேடி தேடி சாப்பிடுவது தீவிர இரும்புச் சத்து குறைப்பாட்டின் அறிகுறியாகும். இதற்கு பெயர் பேகோஃபேஜியா.
அமைதியாக அமர முடியாமல் பரபரவென கால்களை இயக்கிக் கொண்டேயிருக்க வேண்டுமென தோன்றுவது பின் கால்களில் எப்போதும் கூசிக் கொண்டேயிருந்தால் அது ரத்த சோகையின் அறிகுறியாகும்.