2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு இன்றைய தினம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
நாட்டில் மருந்தகங்கள் வைத்திருக்கம் அனைவரும் சட்டரீதியாக பதிவு செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
அவ்வாறு மருந்தகங்கள் பதிவு செய்யப்படாவிட்டால்,பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
பதிவு செய்யாத மருந்தகங்களுக்கு அபராதப் பணமாக ரூபா ஒரு இலட்சம் விதிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,தாதியர் பயிற்சி நிலையத்திற்கு 200 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,சுகாதாரத் துறைக்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வாசிப்பின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.