டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி ஜாதிக ஹெல உறுமய கொண்டுள்ள கொள்கையின் வெற்றியே:நிஷாந்த

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றமையானது ஜாதிக ஹெல உறுமய கொண்டுள்ள கொள்கையின் வெற்றியென அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

trump

கொழும்பில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலம் முழுவதும் ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் இனவாதிகள் என குற்றம் சுமத்தியது போல், டொனல்ட் ட்ரம்ப்பையும் இனவாதி, போர் மனநிலை கொண்டவர், மத வாதி என முத்திரை குத்திய போதிலும் அவரது தேசியவாதம் வெற்றிப்பெற்றுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய இலங்கையில் சிங்கள தேசியவாத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.

இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள் பௌத்தர்களின் உணர்வுகள்,தேசிய நிலைப்பாடுகள், இலங்கை அரசின் இருப்பு, பாதுகாப்புக்காக ஜாதிக ஹெல உறுமய குரல் கொடுத்தது.

தேசியவாதம் அன்று கடும் ஏளனத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. பலர் எம்மை இனவாதிகளாகவும் போர் மனநிலை கொண்டவர்கள் எனவும் மதவாதிகள் எனவும் விமர்சித்தனர்.

அதேபோலவே உலகில் பிரதான ஊடகங்கள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப்பை இனவாதி, மதவாதி, போர் மனநிலை கொண்டவர், சிறுபான்மையினருக்கு எதிரானவர் என முத்திரை குத்தியதுடன் ஹிலரி கிளின்டனை ஆதரித்தன. எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.