அரசாங்கம் வடகிழக்கில் வீடுகள்,பாதைகள், தொழில்களை வழங்கினால் சிறுபான்மையினரது பிரச்சினைகள் தீர்ந்து விடப் போவதில்லை!

அஷ்ரப் ஏ சமத்

இந்த நாட்டில்  மொழிப்பிரச்சினையை தீா்ப்பதென்றால் முதலில்  சகல சமுகங்களுக்கும் அதிகாரப் பகிா்வு வழங்குதல் வேண்டும். அதற்கு முதலில் அரசியல் யாப்பு திருத்தப்படல் வேண்டும்.  21அரசியல் பிரநிதிகள் கொண்ட உப குழு  நாளாந்தம் பிரதமா் தலைமையில் ஒன்று  கூடி அரசியலமைப்பு சம்பந்தமாக ஆராய்ந்து வருகின்றது.  இந்த நாட்டில் தமிழ், சிங்களம், ஆங்கில மும் மெழிகளையும் அரசகரும மொழியாக்குதல்  வேண்டும் என நான் கோரிக்கை விடுத்துள்ளேன். .மொழி அதிகாரங்களை வழங்காமல்      அரசாங்கம் வட கிழக்கில் வீடுகளையும், பாதைகளையும். தொழில்களை வழங்கினால் சிறுபான்மையினரது  பிரச்சினைகள்  தீா்ந்து விடப் போவிதில்லை முதலில் அதிகார பகிா்வுகளை வழங்குங்கள்.  அந்தந்த சமுத்தினா்கள் அனுபவிக்கக் கூடியதும்  அவா்கள் வாழும் பிரதேசத்திற்குரிய அதிகாரங்கள் வழங்குதல் வேண்டும். என அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்
collage_fotor-n_fotor
மேற்கண்டவாறு இன்று(09) கொழும்பு லக்ஷ்மன் கதிா்காமா் நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அமைச்சா்  மனோ கனேசன் தெரிவித்தாா். 
 கலாநிதி பாக்கியஜோதி சரவனமுத்து தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தின்போது  மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தினால் ”த சிட்டிசன் லங்கா வெப்தளத்தினையும்(Citizenslanka.org  மற்றும்     மொழிகள் சம்பந்தமாக சுதந்திர மொழி ஆய்வு அறிக்கை நுால்கள் மும்மொழிகளிலும்  வெளியீட்டு வைபவமும் நடைபெற்றது. இந் நிகழ்வில் நெதர்லாந்து துாதுவா்  திருமதி ஜோனி டொனவாா்ட் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள். 
தொடாந்து உரையாற்றிய அமைச்சா் மனோ கனேசன் –
 இந்த நாட்டில்  3 மொழிகள், 4 மதங்கள், 19 இனங்கள் வாழ்கின்றனா். அரச மொழியான தமிழில் சேவையாற்றுவதற்கு எனது அமைச்சின் ஊடாக சகல அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் மொழிபொயா்ப்பாளா்கள், மொழி உரைபெயா்ப்பாளா்கள் தமிழ் மொழி கனனி இயக்குணா்கள் என நியமிக்க உள்ளேன்.   அண்மையில் அரச  பஸ்சின் முன்   ஆசனத்தில்  சிங்கள மொழியில்  ஒரு வசனம் எழுதப்பட்டிருந்தது.  கர்ப்பிணித் தாய் மாா்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம்  இவ் வசனத்தின் தமிழ் மொழிபெயா்ப்பு எவ்வாறு  இருந்தது ”கர்பிணி நாய்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம்”   தாய்  நாய் என்று எழுதுகின்றாா்கள். இ தனை கவணித்த தமிழ் பொதுமக்கள் தமிழையே இப்படி  கொலைசெய்கின்றனா். அதற்காக மொழி மாற்றம் வேண்டாம் என எண்னிடம் தெரிவித்தா்ா். 
மொழிகள் சகலருக்கும்  சமமாக இருத்தல் வேண்டும்.  வடக்கு கிழக்கு, மலையகப்பகுதியில்  தமிழ் பேசக்கூடிய கல்வி கற்ற  பொலிசாா்கள் அங்கு கடமையில் இருந்தால்தான் தமிழ் பேசும் மொழியில்  கருமமாற்ற முடியும் . தற்பொழுதும் தமிழ் மக்கள் சிங்களத்தில் முறைப்பாடுகளை பதிந்து கையெழுத்து வைப்பவா்களாக இருக்கின்றனா். அவா்களுக்கு அந்த மொழி தெரியவில்லை. 
  
மேலும் 100 ருபா பணநோட்டு சிங்கள மொழியில் மட்டும்தான் அதில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.   தமிழில் மொழிமற்றம்மில்லை,  இந்த நாட்டில் உள்ள மருந்துவகைகளில் உள்ள பாவிக்கும் முறைகள் தமிழ் மொழியில் மாற்றம் வேண்டும்.  ஏற்கனவே 600க்கும்  மேற்பட்ட  மொழி சம்பந்தமான முறைப்பாடுகள் நீதிமன்றத்திலும்  மணித உரிமை கமிசனில் உள்ளது. இதனை அதிகாரிகள் அமுல்படுத்த தயங்குகின்றாா். ஒரு அலட்சிபப் போக்கில் உள்ளனா். காரணம் அங்கு தமிழ் மொழி மூலம் கடமையாற்றி போதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை.   அதற்காக அந்த நிறுவனம் அமைச்சின் செயலாளாரை அழைத்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றும் வங்கிகள். காப்புறுதி நிறுவனங்கள்  போன்ற பல்வேறு நிறுவனங்கள் சிங்கள மொழியிலேயே விண்ணபங்களை நிரப்பி தருமாறு தமிழ் மக்களிடம் கேட்கினற்னா். 
தமிழ் மொழியை அமுல்படுத்த அமைச்சரவையிலும்  பாராளுமன்றத்திலும் தடைவிதிக்கும் இனவாத அரசியல் வாதிகள் இன்னும்  இருகின்றாா்கள்..  ஆகக்குறைந்தது இந்த மொழி அமுலாக்கலை அமுல்படுத்தவதற்கு எனக்கு ஆணை அதிகாரம் வழங்குக்ஙகள் ஆகக்குறைந்த 100க்கு  51 வீதமாவது மொழி அமுலாக்கலை செய்து காட்டுகின்றேன்  என   ஒவ்வொரு முறையும் அமைச்சரவையிலும், ஜனாதிபதியிடமும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தவனாகவே உள்ளேன். இதுவரை அவா்கள் உரிய ஆணையை எனக்கு வழங்கவில்லை.   இந்த நாட்டில்  சிங்களவா்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளும் ஏனைய சமுகத்திற்கும் தேவை  இது சிங்கள நாடு சிங்களவா்கள் மட்டும் தான் வாழவேண்டும் என்ற உணா்வினை இனியும் சிலா்  கருத்திற் கொள்ள கூடாது. எனவும் அமைசச்ர்  மனே கனேசன் அங்கு தெரிவித்தாா்.