இந்த நாட்டின் முதல் மூன்று முக்கிய சமூகங்களும் ஆட்சி அதிகாரத்தின் சம பங்காளிகள் ஆக்கப்படும் நாளில் இருந்தே இந்த நாட்டைப் பீடித்துள்ள பீடை அழிந்து நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், நாட்டு மக்கள் நிரந்தர அமைதி சமாதானத்தோடும், தேசாபிமானத்தோடும் சுபீட்சமாய் வாழவும் வழி பிறக்கும். எனவே இந்த நாட்டின் சிங்கள பௌத்த தேசியமும், தமிழ் தேசியமும், முஸ்லிம் தேசியமும் ஒன்றிணைக்கப்பட்ட தத்தம் பெரும்பான்மை பிரதேசங்களில் தமது தேசியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான சமஷ்டி ஆட்சிகளுக்கு இடமளித்து கூட்டாட்சி முறையைப் பெருந்தன்மையோடு உருவாக்க முன்வருமானால் தெற்காசியாவிலேயே முன்னணியில் திகழும் ஒரு நாடாக இலங்கை மிளிரும்.
எனவே சிங்களமொழிப் பிரதேசங்களை ஒன்றிணைத்து சிங்கள பௌத்த தேசியத்திற்கான ஒரு சமஷ;டியும், வடக்கு கிழக்கின் தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களை இணைத்து ஒரு சமஷ்டியும், வடக்கு கிழக்கின் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்கைள இணைத்து ஒரு சமஷ;டியும் என மூன்று சமஷ்டிகளின் கூட்டாட்சியை முழு இலங்கையையும் மையப்படுத்தி உருவாக்குவதன் மூலம் எல்லா சமூகங்களினதும் இஷ்டத்திற்குரிய ஒரு சிறந்த செல்வந்த நாடாக இலங்கை மாற்றமடையும் என்பது உறுதியானதே.
எனவே இந்த முக்கியமான மூன்று சமூகங்களினதும் கூட்டாட்சியிலேயே இந்த நாட்டுக்கு உய்வு உண்டு| என்று முன்னாள் அமைச்சரும், கலைக்கப்பட்ட வட- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவருமான சட்டத்தரணி வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு வீதியில் 21.10.2016 வெள்ளியன்றும், பள்ளிக்குடியிருப்பில் 28.10.2016 வெள்ளியன்றும், அக்கரைப்பற்று ஆயிஷh வித்தியாலய வீதியில் 04.11.2016 வெள்ளியன்றும் நடைபெற்ற முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் அவசிய, அவசர, பகிரங்க, பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய சேகு இஸ்ஸதீன் தொடர்ந்து பேசியதாவது:-
வ/கி தழிழர்களின் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் சிங்கள பௌத்த தேசியம் மேற்கொண்டு வந்துள்ள இழுத்தடிப்புகளும், முஸ்லிம்களின் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட தேசிய இனப்பிரச்சினையை மழுங்கடிப்பதில் தமிழ் தேசியம் கைக் கொண்டு வரும் மாற்றாந்தாய் மனப்பான்மையும் நாட்டை கட்டியெழுப்ப இடந்தராமல் குட்டிச் சுவராக்குவதிலேயே முடிந்துள்ளன.
சிங்கள பௌத்த தேசியத்தை குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும் தழிழ் தேசியம், தமிழ் மொழியைப் பேசி தழிழர்களது பிரதேசங்களை அடுத்தடுத்து வாழும் முஸ்லிம் தேசியத்தின் தனித்துவத்தையும், பிரத்தியேக அரசில் அபிலாசைகளையும் தரங்குறைத்து, தட்டிக்கழித்து வருவது எந்த நியாயத்தில் அடங்கும். தலை நிமிர்ந்து வாழத்துடிக்கும் தமிழர்கள், சகோதர தமிழ் மொழிச் சமூகத்தின் தலையை குனித்து வைத்திருக்க போடும் ராகம் தப்பிய தாளம் இந்த இரு தமிழ் மொழி தேசியங்களையும் தவறான வழிக்கு இட்டுச் செல்லும் என்பதை இரு தேசியத்தவரும் இன்னும் உணராமல் இருப்பது எதிரியின் வர்மத்தை இலகுவாக்கி வைக்கும்.
வடக்கு கிழக்கின் இணைப்புக்கும், தமிழ் தேசியத்திற்கான சமஷ;டிக்கும் அவசியமான வட கிழக்கு முஸ்லிம் தேசியத்தின் நல்லுறவையும், உதவி ஒத்தாசைகளையும் முன்னாள் நீதியரசரின் தலைமையிலுள்ள வடமாகாண சபையே புரிந்து கொள்ளாமல் இருப்பது தன்னாதிக்கத் திமிரின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது.
வஃகி தமிழ் தேசியத்திற்கு வடக்கு கிழக்கில் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களை இணைத்து ஷஒரு வடகிழக்கு சமஷ்டி ஆட்சியையும் அதே வடக்கு கிழக்கின் முஸ்லிம் பெருன்பான்மை பிரதேசங்கனை இணைத்து ஒரு ஷதென் கிழக்கு சமஷ்டி ஆட்சியையும் உருவாக்கும் கோரிக்கைகளை முற்படுத்தி வடக்கு கிழக்கின் இணைப்புக்கு முஸ்லிம்களின் பேராதரவை தமிழர்கள் கோருவார்களேயானால் வடக்கு கிழக்கு சகல முஸ்லிம்களும் தழிழர்களோடு இணைந்து இரண்டு சமஷ்டி ஆட்சிகளுக்காகவும் போராடுவதற்கு தயாராகவே இருக்கிறார்கள் என்பதை தமிழ் தேசியம் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
1956ல் நான்காவது வருடாந்த மாநாட்டில் பிரசித்தி பெற்ற திருமலைத் தீர்மானத்தில் இணைந்த வடகிழக்கில் சுயாட்சி தமிழரசும், சுயாட்சி முஸ்லிம் அரசும் உருவாக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானம் அறுபது வருடங்களாகியதில் பழசு பட்டுப்போனதனாலா வடமாகாணசபை அந்தத் தீர்மானத்தை மறந்த விட்டது அல்லது முஸ்லிம்களுக்கு சுயாட்சி தர வடமாகாணசபை தயாரில்லாமல் போனதனாலா?
அதேபோல 1964ல் தந்தை செல்வா இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமமான ஆட்சி அதிகாரம் வழங்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் ஒன்பதாவது மாநாட்டில் எடுத்த தீர்மானம் 50 வருடங்களாகி பழசு பட்டுப்போனதனாலா வடமாகாண சபை அந்தத் தீர்மானத்தையும் மறந்து விட்டது அல்லது முஸ்லிம்களோடு ஆட்சி அதிகாரத்தை சமமாக பகிந்துந் கொள்வதற்கு தயாரில்லாமல் போனதனாலா?
அதுவும் போகட்டும் 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்தையோ ஒரு சமயம் இன்னொரு சமயத்தையோ அடக்கி ஆள பன்முகப் படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தின் கீழ் இடமளிக்கப்படமாட்டாது என்றும், குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்கள் விரும்பும் பட்சத்தில் அவர்கள் தனித்துச் செல்ல உத்தரவாதம் அளித்ததையும் வடமாகாண சபை தனது தீர்வுத் திட்டத்தில் இடமளிக்க மறுத்துவிட்டது அந்தத் தீர்மானம் 40 வருடங்களாகி பழசு பட்டுப்போனதனாலா? அல்லது வடகிழக்கு முஸ்லிம்களுக்கு சமமான ஆட்சி அதிகாரம் வழங்காமல் முஸ்லிம்களை தன்னாட்சிப் பிராந்திய சபையைக் காட்டி ஏமாற்றி விடலாம் என்பதனாலா?
அன்று நகமும் சதையும்போல ஒரே தமிழ் தாயின் இரட்டைக் குழந்தைகள் போல இருந்த தமிழர்களையும், முஸ்லிம்களையும் ஓடும் புளியம் பழமும் போல ஆக்கிய வடமாகாணத் தமிழர்கள் தான் இன்று முஸ்லிம்கள் 1956லும் 1964லும் இலங்கை தமிழரசுக் கட்சி வஃகி முஸ்லிக்களுக்களித்த வாக்குறுதியையும் 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணி வ/கி முஸ்லிம்களுக்கு அளித்த உத்தரவாதத்தையும் நினைவிலிருத்தி தமக்கு தனியான பிரத்தியேகமான சமஷ்டி ஆட்சியை முஸ்லிம்கள் கோருவதற்குக் காரணமானவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
வடகிழக்கு மாகாண தமிழ் ஆயுதப்போராளிகள் 1985ல் கிழக்கு மாகாணம் முழுவதும் முஸ்லிம் மக்கள் மீது அடர்ந்தேறி பண்ணிய 1,500க்கும் மேற்பட்ட படுகொலைகளும் 60,000க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காலத்துக் காலம் அகதிகளாக்கப்பட்டதும், வீடுகள் உடைக்கப்பட்டதும், வியாபாரஸ்தலங்கள் எரிக்கப்பட்டதும், கடத்தப்பட்டதும், கப்பமறவிடப்பட்டதும் 60,000க்கும் மேற்பட்ட ஏக்கர் காணி நிலங்கள் கவரப்பட்டதும் போன்ற எத்தனையோ விடயங்கள் இன்றும் நெஞ்சை விட்டும் அகலாத இரத்தம் சொட்டும் காயங்களாகும். அத்தோடு 1990 ஒக்டோபர் இறுதியில் ஒரு முஸ்லிமையும் விட்டு வைக்காது வடமாகாணத்து முஸ்லிகளை இனச்சுத்திகரிப்பின் பேரில் துப்பாகி முனையில் விடுதலைப் புலிகள் விரட்டியடித்த கைங்கரியமும் தான் இன்றைக்கு முஸ்லிம்கள் தனித்துச் செல்லும் விடயத்தில் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமின்றி ஒற்றை பிடிவாதமாக இருப்பதற்குக் காரணங்களாகும் என்பதை தமிழ் தேசியம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
முஸ்லிம்களின் தாகம் இன்று சமத்துவத் தாயகம் என்பதை தமிழ் தேசியம் நினைவில் வைத்து செயற்பட்டு இரண்டு தழிழ்மொழிச் சமூகங்களுக்குமான இரண்டு சமஷ்டி ஆட்சிகளுக்கான தீர்வுத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து முன்வைத்து போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
A.L.Aazath
Law College