அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தெரிவு , ஹிலாரி அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

483208412-real-estate-tycoon-donald-trump-flashes-the-thumbs-up-jpg-crop_-promo-xlarge2
அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

நேற்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு  ஓட்டுபதிவு தொடங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணிக்கு  ஓட்டுப்பதிவு முடிந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாகாணமும் ஓட்டு எண்ணிக்கையை தொடங்கியது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் ஓட்டு முன்னணி நிலவரங்களும் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. 

அதன்படி அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அதிக மாகாணங்களில் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். அதே நேரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் கூடுதல் ஓட்டுகள் பெற்றார்.

அதன்படி குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் டெக்காஸ், சவுத் கரோ லினா, ஒகியோ, வெஸ்ட் வெர்ஜீனியா, அலபாமா, இண்டியானா, சென்டக்கி டென்னஸ்சி, மிசிசிப்பி, மிசோரி, அர்கன் சாஸ், லவுஸ்லானா, வடக்கு டகோபா, தெற்கு டசோபா, நெப்ரஸ்கா, கன்சாஸ், ஒல்காமா, மர்னடனா, விசாமி, சிகாகோ ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கலிபோர்னியா, நியூயார்க், நியூஜெர்சி, மேரிலேண்ட், கொலம்பியா டி.சி. வெர் மாண்ட், மாசா சூசெட்ஸ், சேவல், கனெக்டிகட், எலே வார், ரோடோதீவு, இல்லினாய்ஸ், கலோரெடா, நியூ மெக்சிகோ ஆகிய மாகாணங்களை கைப்பற்றியுள்ளார்.

ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஹிலாரி, டிரம்ப் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். ஆனால், சிலமணி நேரங்களில் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. டிரம்ப் அதிக தொகுகளில் முன்னிலை பெற்றார். குறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கும் பெரிய மாகாணங்களான அதிக ஓட்டுகள் கொண்ட டெக்சாஸ், புளோரிடாவை கைப்பற்றினார். அதன் மூலம் டெக்சாசில் 38 பிரதிநிதிகளையும், புளோரிடாவில் 22 பிரதிநிதிகளையும் ஒட்டு மொத்தமாக பெற்றார். மேலும் அதிக தேர்வாளர்களை கொண்ட மிக்சிகன் (16), ஜார்ஜியா (16), அரிசோனா (11), மேற்கு வாஷிங்டன், விள்கான்சின் (10) உள்ளிட்ட மாகாணங்களையும் கைப்பற்றினார்.

ஜனநாய கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிக ஓட்டுகள் கொண்ட கலிபோர்னியாவை கைப்பற்றினார். இதன் மூலம் அங்கு மட்டும் அவருக்கு 55 தேர்வாளர்கள் கிடைத்துள்ளனர். பெரிய மாகாணமான பென்சில் வேனியாவில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

இங்கு அவர் 20 தேர்வாளர்களை பெற்றுள்ளார். இவை தவிர மைனே (4), மின்னசோட்டா (10), லோவா (6), ஒரேகா (7) ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை மக்களின் அமோக ஆதரவை பெற்று இருந்தாலும் அவர் வெற்றி பெறமுடியாது. எலெக்டோரல் காலேஜ் என்றழைக்கப்படும் தேர்தல் சபையில் உள்ள 538 தேர்வாளர்களில் 270 பேரின் வாக்குகளை பெறுபவர்கள் அதிபராக முடியும்.

தற்போதைய முடிவுகளின் பிரகாரம்  ஹிலாரி 218 வாக்குகளையும், டிரம்ப் 276 வாக்குகளையும் பெற்றனர்  . பிரதிநிதிகள் சபையிலும் பெரும்பான்மையை குடியரசு கட்சி தக்க வைத்தது. எனவே, டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தெரிவாகியுள்ளார்  .