ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மாத காலத்திற்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஏதேனும் ஒர் காரணத்திற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்த வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ள வேண்டுமாயின் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அது குறித்து ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகத்திற்கு அறிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத காலம் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும், அமர்வுகள் நடைபெறும் முழுக் காலப் பகுதியிலும் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.