தமது உறுப்புரிமை நீக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சி தமது தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தங்கல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக்குறிப்பிட்டார். கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதன் யாப்புக்கு ஏற்ப நடக்க வேண்டும்.
ஏற்கனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உறுப்புரிமையும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியினால் ரத்து செய்யப்பட்டது.
எனினும் பின்னர் அவர் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். எனவே தமது உறுப்புரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.