ராசி முஹம்மட் ஜாபிர்
இது SLTJயினருக்கும் அவர்கள் அல்லாதோருக்குமான பதிவு,
முஸ்லீம் தனியார் சட்டத்தை மாற்றும் முயற்சியை எதிர்ப்பவர்களை விட அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த SLTJ யினரை எதிர்ப்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். இன்றைய நாளின் விவாதம் அரசாங்கம் செய்ய முனைவது சரியா தவறா என்பதல்ல. SLTJ செய்தது சரியா தவறா என்பதுதான்.என்ன ஒரு அறிவீனச் சகதிக்குள் நாம் அமிழ்ந்திருக்கிறோம்.
நான் SLTJன் பல இஸ்லாமிய நிலைப்பாடுகளின் பயங்கர விமர்சகன்.அவர்களின் பல அப்பட்டமான கருத்துகளின் முதல் எதிரியும் கூட.அதற்காக அவர்கள் ஏதாவது செய்தால் பிழையாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் இயக்க வெறி பிடித்த போதைக்காரனல்ல.
அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த முறையில் தவறிருக்கிறது.எதிர்ப்பதையும் நாகரீகமாக எதிர்க்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லித்தருகிறது. ஆர்ப்பாட்டத்தில் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்களில் தவறிருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டம் செய்வதே தவறு என்று கூறுவது முட்டாள்தனம்.
இலங்கையில் மதிக்கப்படும் இன்னொரு இயக்கத்தைச் சேர்ந்த பிரபலமான ஒரு உலமாவும் அவர்களது ஆர்ப்பாட்டத்தைச் சாடியிருந்தார்.பழுத்த அனுபவமும் சமூகக்கவலையும் கொண்ட பல புத்தி ஜீவிகள் சமூகத்தில் இருக்கிறார்கள்.அவர்களைக் கொண்டு இவை நடாத்தப்படவேண்டும் என்ற தோரணையில் அவர் பேசியிருந்தார். நடாத்துங்கள். புத்திஜீவிகளை, சட்டத்தரணிகளை மார்க்க அறிஞர்களை வைத்து கலந்துரையாடுங்கள். அரசாங்கத்திடம் மஹஜர் சமர்ப்பியுங்கள்.அதனை மேல்மட்டத்தில் நீங்கள் செய்து கொண்டு செல்லுங்கள்.இவர்கள் கீழ்மட்டத்தில் வீதியில் இறங்கிப் போராடட்டும்.அவர்களது ஆர்ப்பாட்டத்தில் தவறிருந்தால் சொல்லிக்கொடுங்கள்.
திருத்துங்கள். எதிர்ப்பை எல்லா மட்டத்திலும் காட்டுங்கள்.இன்று எதிர்ப்பதை விட்டுவிட்டு எதிர்ப்பவனை எதிர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இது என்னவென்றால் நீங்கள் மட்டும்தான் இலங்கை முஸ்லீம்களின் பிரதிநிதிகள் மாதிரியும், உங்களுக்குத்தான் நல்ல நல்ல ஐடியாக்கள் வரும் போலவும்,ஏனையவர்கள் ஏதாவது செய்ய முற்பட்டால் ‘இவர்களுக்கு செய்யத்தெரியாது’கால,சூழ்நிலை அறிந்து செயற்பட வேண்டும் என்று அறிக்கை மட்டும் விட்டு விட்டு புரண்டுபடுப்பதும்,எங்கள் இயக்கம் செய்தால் மாத்திரம் சரி,உங்கள் இயங்கங்களின் முன்னெடுப்புகளெல்லாம் பிற்போக்கானவை என்று விமர்சிப்பதும்…இதுதான் அப்பட்டமான இயக்க வெறியென்பது.
SLTJ ஆர்ப்பாட்டம் செய்தது தவறு என்றால் அவர்களையும்,ஏனையோரையும் சேர்க்காமால் நீங்கள் மஷூரா செய்வதும் தவறுதான்.
இது ஒரு பொதுப்பபிரச்சினை.பாரிய பிரச்சினை.எல்லோரும்,எல்லோரையும் சேர்த்துக்கொண்டு நடந்து போங்களேன்.
ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி
http://bj4.1c5.myftpupload.com/?p=35078