கந்தபளையில் லயன் குடியிருப்பு தாழிறக்கம் – 120 பேர் இடம்பெயர்வு!

க.கிஷாந்தன்

மந்தாரநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை கோணபிட்டிய தோட்டத்தில் 04.11.2016 அன்று வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழை காரணமாக, அங்குள்ள லயன் குடியிருப்பொன்று தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பகுதியிலுள்ள 56ஆம் இலக்க குடியிருப்பு பகுதியிலேயே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர், கோணபிட்டிய தோட்டத்திலுள்ள முன்பள்ளி பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

collage_fotor-3

பாதிக்கப்பட்ட மக்களை, மலையக அரசியல்வாதிகள் எவரும் பார்வையிட வரவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப்பொருட்கள், உணவு பொருட்கள் என்று எவையும் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.