எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது!

moon-min

எதிர்வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது. பவுர்ணமி தினமான அன்று நிலா தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகே வரும்போது, “Supermoon” அதாவது பெரிய நிலவாக தெரியும். 70ஆண்டுகளில் இல்லாத அளவு அன்று நிலா மிகப் பெரிய அளவில் காணப்படும்

1948ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த மாதம் 14ஆம் தேதி நிலா பூமிக்கு வெகு அருகில் வரவுள்ளது. இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய “பெருமுழுநிலவு” அது. வழக்கமான பெருநிலவைவிட அதுபெரியதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது.

இதனை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அடுத்து அதுபோன்ற பெருநிலவைக் காண, 2034ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டும்