அனைத்­துத்­த­ரப்­பி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­களின் பின்பே முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன: நீதி­ய­ரசர் சலீம்

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள், சட்­டத்­த­ர­ணிகள், நீதி­ப­திகள், அர­சியல் பிர­மு­கர்கள் மற்றும் முஸ்லிம் பெண் பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­க­லாக அனைத்­துத்­த­ரப்­பி­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டல்­களின் பின்பே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன எனவும் திருத்­தங்கள் அடங்­கிய சிபா­ரி­சுகள் இம்­மாத இறு­தியில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷவிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு 2009ம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்தார்.

saleem marsoob

தனது தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு எதிர்­வரும் 6 ஆம் திகதி இறு­தி­யா­கக்­கூடி திருத்­தங்­களை மீண்டும் உறுதி செய்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், புதிய திருத்­தங்கள் ஷரீ­ஆ­வுக்கு அமை­வாக சமூ­கத்தின் நலன்­க­ருதி பரிந்­துரை செய்­யப்­ப­ட­வுள்­ளது.

6ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள குழுவின்  இறு­திக்­கூட்­டத்தில் இத்­தி­ருத்­தங்­களை சிபார்சு செய்­வ­தற்கு பெரும்­பான்மை ஆத­ரவு பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அர­சாங்கம் அமைச்­ச­ரவை உப­கு­ழு­வொன்­றி­னையும் நிய­மித்­துள்­ளது. இது தொடர்பிலும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. 

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்டு வரப்­ப­ட­வேண்­டு­மென்ற கோரிக்கை நீண்ட கால­மாக முன்­வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே 2009ம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்­ச­ரினால் இக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

இக்குழு, முஸ்லிம் விவாக, விவா­க­ரத்­துச்­சட்­டத்தில் (தனியார் சட்டம்) மேற்­கொள்­ள­வேண்டிய திருத்­தங்­களை சட்ட வரை­வாக தயா­ரித்­துள்­ளது என்றார்.

இதே­வேளை முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை வர­வேற்­றுள்­ள­துடன் மேற்­கொள்­ளப்­படும் திருத்­தங்கள் குர்ஆன், ஹதீ­ஸுக்கு அமை­வாக அமை­ய­வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

2009ம் ஆண்டு ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தங்களுக்கான குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.