இலங்கையில் மனித உரிமை அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க தவறிவிட்டன : நீதியமைச்சர்

இலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் சந்தேகநபர்களினதும், குற்றவாளிகளினதும் உரிமைகளையே பாதுகாத்தன.

vijayathasa wijaya

எனினும் அந்த அமைப்புக்கள், பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க தவறிவிட்டன என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்

பொலிஸின் கீழ் நிறுவப்படும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவும் பிரிவின் அங்குரார்பண நிகழ்வின்போது அமைச்சர் இதனைக்குறிப்பிட்டார்.

இலங்கையில் ஒரு அரசசார்ப்பற்ற நிறுவனம் கூட பாதிக்கப்பட்டவர்களை கவனிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தேகநபர்களை பற்றியும் கைதிகளை பற்றியுமே ஒவ்வொருவரும் பேசுகின்றனர். எனினும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது மற்றும் சாட்சிகளை காப்பாற்றுவது தொடர்பில் யாரும் கதைப்பதில்லை.

இந்தநிலையிலேயே சட்டத்தின்பால் நம்பிக்கையில்லாத பாதிக்கப்பட்டவர், தமது கைகளில் சட்டங்களை எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.