வாசிப்பை நேசிக்காத மனிதன் உலகில் நல்லறிவையும்,சமூக அந்தஸ்த்தையும் பெறமுடியாது !

2-pmma-cader-27-10-2016பி.எம்.எம்.ஏ.காதர்

வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் சிறந்த அறிவையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்ள முடியும்;.வாசிக்காத மனிதன் நல்லறிவையும்,சமூக அந்தஸ்த்தையும் பெறமுடியாது.ஆகவே மாணவர்கள் ஒவ்வொருவரும் நன்கு வாசிப்பவர்களாக மாற வேண்டும் என துறைநீலாவணை பொது நூலகத்தின் நூலகர் ஜனாபா ஹரீஷா சமீம் தெரிவித்தார்.

3-pmma-cader-27-10-2016

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு துறைநீலாவணை பொது நூலகத்தில் துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(27-10-2016)நூலக வளாகத்தில் நடைபெற்றது இங்கு தலைமையுரையாற்றி போதே நூலகர் ஜனாபா ஹரீஷா சமீம் இவ்வாற தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆசிரியைகளான ஹேமரதி மயூபதன்,திருமதி ஜானகி பரமேஸ்வரன்,திருமதி கலைவாணி மோட்சநாதன்,நுஸலக உத்தியோகத்தர் சற்சுரூபவதி ஆகியோருடன் மாணவர்களும் கலந்து கொண்டனர் இதில் வாசிப்பு விழிப்பணர்வு ஊர்வலம்,புத்தகங்களைப் பார்வையிடுதல்,வாசித்தல் போன்ற நிகழ்வகள் இடம் பெற்றன்

இங்கு நூலகர் ஹரீஷா மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :- வாசிப்பை நேசிக்காத மனிதன் உலகில் எதையுமே சரியாக அறிந்து புரிந்து கொள்ள மாட்டான்.வாசிக்கத் தெரியாததனால் இன்று பலர் மிகவும் கஷ்டப்படுகின்றனர் இந்த நிலை எதிர்காலத்தில் யாருக்கும் வரக்கூடாது.

அரசாங்கம் பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து ஒவ்வொரு கிராமத்திலும் நூலகங்களை அமைத்துள்ளது இந்த நூலகங்களை கிராமத்தில் உள்ளவர்களும் மாணவர்களும் நன்கு பயன்படுத்தி நன்மையடைய வேண்டும் மாணவர்கள் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் இந்த நூலகத்திற்கு வரலாம் நீங்கள் வாசிப்பதற்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தருவோம் எனத் தெரிவித்தார்.