கரடி முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட ஜோடி

ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

personal-space-bear-wedding
அந்த வரிசையில் ரஷிய ஜோடி ஒன்று தற்போது இணைந்துள்ளது. ரஷியாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதன்படி ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்திற்கு அழைத்து அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சுற்றிலும் மரங்கள், புல்வெளி, பழங்கள் என இயற்கையான சூழலுக்கு நடுவில் பூங்கொத்துகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தோரணத்தின் நடுவில் ஸ்டீபனை சாட்சியாக வைத்து டெனிஸ், நிலியா மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

3 மாதங்களில் தனது தாயை இழந்து காட்டில் பரிதவித்த ஸ்டீபனை ரஷியாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா-யூரி தம்பதியர் தத்தெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.