ஒரு கட்சியை உருவாக்குவதும், அந்த கட்சிக்கு தலைமை தாங்குவதும் அவரவருடைய விருப்பம், அதில் யாரும் தலையிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ்ஸை பார்வையிடுவதற்காக நேற்று மாலை மஹிந்த சிறைச்சாலை சென்றிருந்தார்.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
200 மில்லியன் ரூபாய் பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு டிரான் அலஸ் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை விடவும் பாரிய ஊழல் மோசடிகள் மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதை செய்த மாபெரும் திருடர்கள் வெளியில் சுதந்திரமாக அழைகின்றார்கள். இதற்கு காரணம் தற்போதைய பொலிஸ் அதிகாரமும், சட்டமும் ஒவ்வொரு நபர்களுக்கும் ஏற்ற வகையில் வலைத்துக்கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஸ்திரமற்ற ஒரு நிலையிலேயே இன்றைய சட்டமும், பொலிஸூம் காணப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடனான செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மஹிந்த,
எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாக தெரியவருகின்றது.