சம்பூர் பிரதேசத்தின் காணிகளை விடுவிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தமை எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே நீதிமன்றத் தின் தடை உத்தரவினை நீக்குவதற்கு அரசாங்கம் மேன்முறையீடு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே கேட்வே இன்டஸ் ரீஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட காணியை மீள அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த விடயத்தில் ஜனாதிபதியின் தீர்மானத்தை சாவலுக்கு உட்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்பூர் காணிகளை விடுவிப்பதற்கு கடந்த 15 ஆம் திகதி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தமை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யுத்ததின் பின்னரான காலப்பகுதியில் தமது சொந்த இடங்களை இழந்து தவித்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் விசேட தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்புர் காணிகளையும் விடுவிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ள சம்புர் காணிகளை ் 2012 ஆம் ஆண்டின் போது இலங்கை முதலீட்டு சபையுடன் செய்துக் கொண்ட ஒப்பந்ததின் பிரகாரம் கேட்வே இன்டஸ்ரீஸ் நிறுவனம் குறித்த நிலப்பரப்பை குத்தகையின் அடிப்படையில் பெற்றுக் கொண்டது.
இந்த நிறுவனத்தினூடாக மின்சாரம் ,பசளை ,சீனி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு் கைத்தொழிகளை ஆரம்பிக்கும் நோக்குடனே இந்த நிறுவனம் குறித்த காணியை பெற்றுக் கொண்டது. இதற்கு முன்னைய ஆட்சியின் போது அமைச்சரவை அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யுத்ததினால் தமது சொந்த இடங்களை இழந்த அப்பாவி மக்களை மீள்குடியேற்றும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கோட்வே இன்டஸ்ரீஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட காணிகளை விசேட வர்த்தமானியினூடாக மீளவும் அரசு பொறுப்பேற்க போவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தமது நிறுவனத்திற்கு பாரியளவில் ந‘்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனூடாக தமது நிறுவனத்தின் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து கேட்வே இன்டஸ்ரீஸ் நிறுவனத்தினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்தப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை கடந்த 15 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் சம்பூர் காணிகளை விடுவிப்பதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
தொடர்பில அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று வினவிய போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,
சம்பூர் காணிகளை விடுவிப்பதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தமை எமக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள குடியமர்த்தும் நோக்குடனே இந்த காணிகளை மீள பெற்றுக்கொண்டோம்.
நிறைவேற்று அதிகாரமிக்கவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே கேட்வே இன்டஸ்ரீஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட காணிகளை மீளவும் பெற்றுக் கொண்டார். இந்த விடயத்தில் ஜனாதிபதியின் தீர்மானத்தை சாவலுக்கு உட்படுத்த முடியாது.
யுத்ததின் இடம்பெற்ற காலப்பகுதியின் போது் தமது சொந்த இடங்களை இழந்து இடம்பெயர்ந்து தவித்த அப்பாவி மக்களை மீள்குடியேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுத்தது.
மேற்படி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் சம்புர் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவோம்.ஆகவே சம்புர் காணிகளை விடுவிப்பதற்கு உயர் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கும் வகையில் அரசாங்கம் என்ற வகையில் இது குறித்து மேன் முறையீடு செய்வோம். உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவினை நீக்கிக்கொள்வோம் என்றார்.