யாழ்.குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் குறித்த இடத்தை இன்று காலை ஆய்வு செய்துள்ளனர்.
கை விலங்கிடப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன், சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த பொலிஸார் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸார் குறித்த இளைஞர்களை தாம் எங்கிருந்து? எப்படி? துப்பாக்கி பிரயோகம் செய்தோம் என்பதை காட்டியுள்ளனர்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுகளில் துப்பாக்கிரவை கூடு மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி சம்பவத்தில் AK-47 அல்லது அதனை ஒத்த இயந்திர துப்பாக்கி மூலம் 9 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்த மாணவனுக்கு துப்பாக்கி ரவை இடது பக்கமாக அல்ல வலது பக்கமாக பட்டு மார்பு பக்கத்தினால் வெளியே வந்துள்ள தாகவும் கூறப்படுகிறது.