நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழு நியமனம் !

lakwijaya1-1கடந்த வாரம் நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் குறித்த மின்நிலையம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய உயர் மட்ட குழுவை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நியமித்துள்ளது.

இருப்பினும் நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயலிழந்தமைக்கான காரணத்தை கண்டறிதல், செயலிழப்பை தவிர்த்துக்கொள்ள முடியுமாக இருந்ததா? என ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கான வழிகளை குறித்த குழுவானது முன்வைக்கவுள்ளது.

எனினும் குறித்த மூவரடங்கிய குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் தலைமையில் ஆர்.ஐ. சேனாரத்ன மற்றும் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது