பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறும் தினத்தன்று, அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாக அறிவித்துள்ளார்.
பெல்ஜியத்துக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
பெல்ஜியத்தில் உள்ள பிரபல சொக்லெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பல அரசியல் குழுவொன்று அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் தனது தொழில் பற்றி கருத்து வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
“என்றாவது ஒரு நாள் நான் அரசியலில் இருந்து ஒய்வு பெறும் சந்தர்ப்பத்தில் பெல்ஜியத்திற்கு சென்று சொக்லேட் தயாரிக்கும் தொழில் ஈடுபடுவேன்”… என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில் சொக்லெட் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்ற வேளையில், இலங்கையின் மூலப்பொருட்களை பயன்படுத்தி சொக்லெட் தயாரித்ததுடன் அதனை தனது மனைவியுடன் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.