ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்: றிசாத் அறிவிப்பு

சுஐப் எம்.காசிம்  

 

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை, நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (21/10/2016) தெரிவித்தார்.

14741611_663309253835123_123242991_n_fotor

பாலமுனை அஸ்ரி அசாம் எழுதிய “இது ஒரு தருணம்“ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

 

ஒலுவில் கடலரிப்பினால் இந்தப் பிரதேச மக்கள் படுகின்ற கஷ்டங்களை ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவில் நானும் இருக்கின்றேன். ஒலுவில் கடலரிப்பினால் இந்த மக்கள் படுகின்ற கஷ்டங்களை, நான் நேரில் கண்டும், உங்களின் வாயிலாகவும் அறிந்திருக்கின்றேன்.

14793686_663308587168523_136880957_n_fotor

ஒலுவிலில் மீனவத் துறைமுகம் அமைக்கப்படுவதன் மூலம் கடலரிப்பினால் ஒலுவில் பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் தீர்க்கப்படுவதோடு, கடலரிப்பின் தாக்கத்தை அனுபவிக்கும் பாலமுனை, நிந்தவூர் மக்களுக்கும் இனி விமோசனம் கிடைக்குமென நான் நம்புகின்றேன். இதன் மூலம் இந்தப் பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நல்ல தருணம் ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகின்றேன்.

பாலமுனை கிராமமானது அதிகளவான எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், இலக்கியவாதிகளையும் தோற்றுவித்த கிராமம். அதனை  அடியொட்டி இளம்கவிஞர் அஸ்ரி அசாம் அவர்கள் தனது எழுத்துப்பணியை மிகவும் சிறப்பாகக் செய்திருக்கின்றார். 

14793864_663308507168531_300633802_n_fotor

இந்தக் கிராமத்தின் வாழ்க்கை முறை மற்றும் தனது வாழ்வில் ஏற்பட்ட ஏக்கங்களையும் கவிதையாக வடித்திருகின்றார். அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் அமைச்சர் கூறினார்.