மிஹின்லங்கா விமானங்களுக்கு விரைவில் பெயர் மாற்றம் !

4r-mre-mihin-lanka-airbus-a320-232_planespottersnet_373293இந்த மாதம் இறுதியில் மிஹின் லங்கா எயார்லைன்ஸ் தனது இறுதி பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஹின் லங்கா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இருந்த மிஹின் லங்கா என்ற சின்னம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

மிஹின் லங்கா சின்னம் அகற்றப்படும் புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகி இருந்தன.

இதன் பின்னர் மிஹின்லங்கா விமானங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயர் பதியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய நட்டத்தில் இயங்கிய மிஹின் லங்கா நிறுவனம் அண்மையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.

மிஹின் லங்கா நிறுவனம் கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட விமான சேவை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.