தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கே.எம்.எச்.காலிதீன் நினைவுப் பேருரை!

seuslஅஸ்லம் எஸ்.மௌலானா
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவரும், கலை கலாசாரப் பீடத்தின் முதல் பீடாதிபதியும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியர் பட்டத்தை பெற்றவருமான கிண்ணியாவைச் சேர்ந்த மர்ஹும் கே.எம்.எச்.காலிதீன் அவர்களின் நினைவுப் பேருரை நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை  (26) பி. ப 2.00 மணிக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
kmh-kalideen
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம்.மஸாஹிர் தலைமையில் நடைபெறும் இந்நினைவுப் பேருரை நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருக்கிறார்.
நினைவுப் பேருரையை கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.மௌனகுரு நிகழ்த்தவிருப்பதுடன் நிகழ்வின் ஏற்பாட்டு குழு தலைவரும் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன், அறபு மொழித் துறை தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ.முனாஸ் ஆகியோர் முறையே தொடக்கவுரை மற்றும் நன்றியுரையை நிகழ்த்தவுள்ளனர்.
அத்துடன் பேராசிரியர் கே.எம்.எச்.கால்தீன் பற்றி தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம்.றிபாய்தீன் தயாரித்துள்ள ஆவணத்தொகுப்பு காண்பிக்கப்படுவதோடு, காலிதீன் பற்றிய கண்காட்சி ஒன்றும் நடைபெற உள்ளது.