தாம் நிரபராதிகள் என பஷில் உள்ளிட்ட நால்வரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

basil rajapkse
                                                                       file image

  திவிநெகும திணைக்கள நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டுள்ளது. 

இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.யூ.கருணாதிலக முன்னிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்பின்னர் தாம் நிரபராதிகள் என, பஷில் உள்ளிட்ட நால்வரும் குறிப்பிட்டனர். 

இதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 15ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.