இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி செயலகம் ஏற்றுள்ளது.
எனினும் தற்போது வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அந்த கடிதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி கோரிக்கை விடுத்தால், இராஜினாமா செய்துக் கொள்ளும் தீர்மானத்தை மாற்றிக் கொள்வதாக டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.
பதவி இராஜினாமா செய்துக் கொள்வதற்கு அவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரதமரின் கடுமையான கோபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.