6 விக்கட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 190 ரன்னில் சுருண்டது. அதிக பட்சமாக லாதம் 79 ரன்னும், சவுத்தி 55 ரன்களும் சேர்த்தனர்.

253599
பின்னர் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ரோகித் சர்மா நிதானமாக விளையாட ரகானே அதிரடியாக விளையாடினார். ரோகித் சர்மா 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்கள் சேர்த்தார். ரகானே 34 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். அரைசதம் அடித்ததுடன் 34-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா 33.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி 81 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 85 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கோலிக்கு துணையாக மணீஷ் பாண்டே 17 ரன்னும், டோனி 21 ரன்னும் சேர்த்தனர். ஜாதவ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி சார்பில் பிரேஸ்வெல், நீசம், சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.