கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், பாலர் பாடசாலை கல்விப் பணியகமும் இணைந்து அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வும், சிறுவர் பொருட்காட்சியையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று காலை (16) கலந்துகொண்டு கூறும்போது மேற்கணடவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
சில ஊடகவியலாளர்கள் பிரச்சினைகளை மட்டும் வெளிப்படுத்தி மக்களையும், அரசியல்வாதிகளையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் செயற்பாடுகள் வெருமனே பிரச்சினைகளை மட்டும் வெளிப்படுத்தி மக்களை குழப்பும் செயற்பாடாக அவர்களின் ஊடகப் பணி அமையக்கூடாது. அரசியல்வாதிகளுக்குள் ஏற்படும் கருத்து முறன்பாடுகள் யாவும் குறிப்பிட்ட சில மணி நேரம்தான். பின்னர் அது சரியாகி ஒரு தீர்வுக்கு வந்துவிடுவோம். இதனை சில ஊடகவியலாளர்கள் மக்கள் மத்தியில் பெறிதாக கொண்டு சென்று மக்களையும் எங்களையும் பாரிய குழப்பத்துக்குள்ளாக்கி விடுகின்றனர்.
ஒருவர் மீது சேறு பூசுவதும், அதனைக் கழுவுவதும் தான் ஊடக செயற்பாடுகள் என்று எண்ணி சில ஊடகவியலாளர்கள் செயற்பட்டும் வருகின்றனர். இவர்களின் மனநிலை முதலில் மாறவேண்டும். சமூகத்துக்கிடையில் ஒரு சமூக நல்லிணக்கத்தையும், சமூகத்துக்கு ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்திய ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் கடமையாக ஊடகப் பணி அமையவேண்டும். ஊடகவியலாளர்களின் கதாபாத்திரம் உலகிலே மிக இன்றியமையாத ஒரு பாத்திரமாக அமைந்து காணப்படுகின்றது. அதற்கமைவாக நீங்கள் செயற்பட முன்வரவேண்டும்.
ஊடகவியலாளர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு, வெருப்பு உள்ளது. அந்த விருப்பு வெருப்புக்காகவேண்டி மற்றவர்களை தாக்கும் முயற்சியில் அவர்களின் செயற்பாடுகள் இரிக்கக்கூடாது என்பதுதான் எனது கருத்தாகும். அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் சுதந்திரமுண்டு. அதில் நான் ஒருபோதும் தலை போடுவதில்லை அதற்காக நான் அவர்களை வெருப்பதும் கிடையாது.
ஊடகவியலாளர்களை நான் மதிப்பவன். அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட மதிப்பையும் மரியாதையும் என்றும் வழங்கி வருகின்றேன். இதில் தவறியது கிடையாது. அவர்களுடன் நெருங்கிய உறவையும், அன்பையும் வைத்து வருகின்றேன் என்றார்.