கடந்த 16 வருடமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கும் கௌரவ சாணக்கியம் செய்த அரசியல் சேவை என்றால் தனது பிழையை சுட்டிக்காட்டுபவர்களை சர்வதிகாரத்தை கொண்டு கட்சியை விட்டு வெளியேற்றுவது ஊர் அரசியல்வாதிகளை பிரிப்பது உதாரணம் பல அதில் சில ஏறாவூரில் ஹபீஸ் நசீர் பஷிர் . கல்முனையில் நிசாம் காரியப்பர் ,ஜவாத் ,றகுமத் மன்சூர் . நிந்தவூரில் பைசால் காசிம் , ஹசன் அலி இப்படி ஒரு கட்சியில் இருப்பவர்களை மோத விட்டு பிரதேச வாதத்தை உருவாக்குவது முஸ்லிம்களின் உயர் பதவியை தடுப்பது இப்படி பல குள்ள நரியின் சேவைகளே செய்துள்ளார் இது இறைவனுக்கும் பிடிக்காது அதனால் இன்று மக்களிடையே செல்லாக் காசியாக இருக்கிறார்.
ஹக்கீமீன் நயவஞ்சக அரசியலுக்குள் மாட்டியுள்ள மக்கள் விடுதலை பெற சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் உதவியை நாடி நிற்கிறது அதிலும் அம்பாறை மாவட்டத்தில் எங்கு சென்றாலும் றிசாத்தை கூட்டி வர வேண்டும் மயிலுக்கு வோட்டு போட வேனும் ஹக்கீமை துரத்த வேனும் என்றே மக்கள் சந்திக்கு சந்தி பேசுகின்றனர் அம்பாறையில் இனி ஹக்கீம் காலடி வைப்பது என்றால் மிகவும் கடினமான சூழ்நிலையே உள்ளது .
சமுதாயத்தை ஒற்றுமைபடுத்தினால் அல்லாஹ்வின் உதவியை பெறலாம் என்ற அஸ்ரப்பின்
சிந்தனையுடன் இன்று அரசியல் செய்யும் சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் தனது கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் உருவானாலும் OUT வெளியே போ என்று கூற வில்லை அந்த வசனமே அவருக்கு தெரியாது
கடந்த சில மாதங்கள் கட்சியின் இரு( ஜெமீல் சிராஜ்) உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து மோதலால் ஒருவர் மனவேதனை காரணமாக அரசியலிருந்து ஒய்வு எடுத்தார் அதை வங்குரோத்து அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்தனர் ஆனால் தலைமையின் நேர்மையை கண்ட சிராஜ் கட்சிலிருந்து கொண்டு தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கினார் அல்லாஹ் அவருக்கு உயர் பதவியை வழங்கியுள்ளான்
ஜெமீல் சிராஜ் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் பதவி வேறுபட்டாலும் பதவிக்காக பிரிந்து வாழக் கூடாது எமது சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்ற சிந்தனை கொண்ட தலைவர் இருவரையும் ஒன்று சேர்த்து சலாம் சொல்ல வைத்தார் இது தலைமை மக்களின் தலைவர் இப்படியான நல்ல பண்பு கொண்ட மனிதனுக்கு பின்னால் முஸ்லிம் சமுதாயம் இன்று நிற்பதை நாம் வரவேற்று சத்திய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டும் இது ஒவ்வொரு முஸ்லிம்களுக்கு கடமையாக இன்று உள்ளது
இப்படி இருவருக்கிடையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் பிரச்சினை என்றால் தற்போது ஒருவர் கட்சியை விட்டு வெளியேறி இருப்பார்
தலைவர் பல மேடையில் பிரச்சினையை ஊபேசி சிரித்து இருப்பார் பித்னாவை உருவாக்கி பிரச்சினை பூதமாக வெடித்து இருக்கும் இப்படியான தலைமையை முஸ்லிம் சமுதாயம் இன்று ஒதுக்கி வைத்துள்ளன இதை பாராட்ட வேண்டும்
எனவே சமுதாயத்தில் பித்னாவை உருவாக்கி அரசியல் செய்யும் ஹக்கீம் காங்கிரஸ் கட்சியை புறந்தள்ளி மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் சிந்தனையிலும் அல்லாஹ்வுக்கு பயந்து அரசியல் செய்யும் நமது சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களே எமது சாமுதாயத்தின் பாதுகாவலன் என்பதை எவரும் மறந்து விட வேண்டாம்
ஜெமீல் அகமட்