இந்த நாட்டில் 86 ஆயிரம் பொலிஸாா் கள் கடமையில் உள்ளனா். இவா்கள் தமது கடமையை துஷ்பிரயோகம், எவரிடமிருந்து பணத்தையோ, அல்லது அன்பளிப்பையோ, ஊழல், அதிகாரப் துஷ்பிரயோகம். சந்தகநபரை முன்கூட்டியே குற்றவாளியாகக் கருதி துண்புருத்தல், தடுப்பில் உள்ள நபா்களை துன்புருத்தினால் உரிய ஆதாரத்துடன் சாட்சியுடன் பொது மக்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் 1960 என்ற ஹொட் இலக்கத்திற்கோ, நேரடியாகவோ, எழுத்து மூலம் தமது பொலிசாா் பற்றிய முறைப்பாடுகளை .அறிவிக்க முடியும். அல்லது செயலாளா், தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இல, 09ஆம் கட்டிடம், பண்டாரநாயக்க மண்டபம், கொழும்பு -07 – தொ. பேசி – 011 – 5107721 என்ற முகவரிக்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும். அத்துடன் சகல மாவட்ட கச்சேரிகள் ,மாகாண சபைகளிலும் பொலிஸ் ஆணைக்குழு அதிகாரிகள் செயல்படுகின்றனா்.
மேற்கண்டவாறு இன்று (12) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவா் பேராசிரியா் எஸ். ரீ. ஹெட்டிகே – தமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் தெரிவித்தாா். இம் ஊடக மாநாட்டில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலளாளா் என். ஆரியதாச குரேவும் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
ஆணைக்குழுவின் தலைவா் தொடா்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில் –
இந்த நாட்டில் உள்ள சகல பொலிசாரும் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஒழுக்கவியற் கோவையில் வழங்கற்பட்டு அதனை தெளிவுர படித்து கையெழுத்திட்டனா். இலங்கை அரசாங்கம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவினை நியமித்து இன்றுடன் ஒருவருடம் முடிவடைந்துள்ளது. இந்த ஒரு வருட காலத்தினுள் பல்வேறு சட்டம், ஓழுங்கு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம். எதிா்வரும் காலத்திலும் இந்த ஆணைக்குழு சிறந்ததொரு பொலிஸ் திணைக்களத்தினை உருவாக்குவோம். பொதுமக்களிடம் இருந்து 2016ஆம் ஆண்டில் பொலிசாருக்கு எதிராக 1474 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அதில் இதுவரை 608 முறைப்பாடுகள் தீா்வு காணப்பட்டுள்ளது. அதில் 24 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டளளது.
பொலிசாா் பதவி உயா்வு மற்றும் அவா்களுக்கான உரிமைகள் மறுப்பு சம்பந்தமாக 3247 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதில் 505 விடயங்களுக்கு நாங்கள் தீா்வைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். பெண் பொலிசாா் 11 ஆயிரம் பேர் உள்ளனா். இதில் 2 சிரேஸ்ட பொலிஸ் மற்றும் 15 உப பொலி அதிகாரி பதவிகள் மட்டுமே உள்ளன. எதிா்காலத்தில் அவா்களுக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபா் பதவி வரை செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம்.
அண்மையில் சடடம் ஒழுங்கு அமைச்சினால் அரசியல் பழிவாங்கள் திட்டத்தின் கீழ் அமைச்சரவை தீர்மாணத்தின் படி 128 பொலிசாாருக்கு பதவிஉயா்வு வழங்குபடி ஆணைக்குழுவுக்கு சிபாா்சு செய்யப்பட்டது. அதனை அடுத்த வாரம் நாங்கள் செயல்படுத்துவோம். அதில் 70 பேர் ஓய்வுதியம் பெற்றுவிட்டாா்கள் அவா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்படும். 150 வருட கால பழை வாய்ந்த இந்த பொலிஸ் திணைக்களத்தில் உள்ள நிர்வாக ஒழுங்கு சட்டம் பற்றிய பிரச்சினைகளை இந்த ஒரு வருடத்திற்குள் தீர்க்க முடியாது . எதிா்காலத்தில் சிறுகச் சிறுக பல தீர்மாணங்கள் புதிய வழிமுறைகள், தெபாழில்நுடபம். ஏனைய நாடுகளான மலேசியா, அவுஸ்திரேலியா நாடுகளின் உள்ள பொலிஸ் அனுகுமுறைகள் பொலிசாாருக்கு பயிற்சிஅளிக்கப்படும்.
இலங்கையினுள் பொதுமக்களது உயிா்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டத்தையும், ஒழுங்கினையும் பேனுவதற்கான பிரதான நிறுவனமே இலங்கை பொலிஸ் ஆகும்.
செயற்பாடு – மனித உரிமைகள் மதிப்பளித்து மற்றும் பாதுகாத்து பொதுமக்களின் பொறுப்புகளினை உறுதிபடுத்தும் சட்டவாட்சயை நிலை நிறுத்தக் கூடிய வினைத்திறன் மிக்க வெளிபபாடத் தனமையுள்ள பொதுமக்களின் அபிலாசைகளுக்கு பதிலளிக்கும் சேவையை இலங்கை பொலிஸ் சேவையை மாறறுவதே எமது செயற்பாடு என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவா் ்பேராசிரியா் ஹெட்டிகே தெரிவித்தாா்.