முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று 11 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.
அங்கு உரையாற்றுகையில்,
நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது. ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் பிரித்து நாட்டை சீரழிக்க முற்படுகின்றனர்’ என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
யுத்தத்தினால் உயிரிழந்த படை வீரர்களுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் இன்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது,
நாட்டில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த மிகவும் பயங்கரமான கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தேன்.
காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதே போன்று, ஆலயங்களிலும் பௌத்த விகாரைகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றதுடன் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியிருக்கவில்லை. ஆசிரியர்களுக்கு பாடசாலைகளுக்கு செல்வதவதற்கு அச்சப்பட்டனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் வருவதற்கு அச்சப்பட்டனர்.
இந்த நிலையை மாற்றி அனைவரும் சுதந்திரமாக இருக்க கூடிய நிலைமையை மாற்றியமைத்தேன்.மிகக்குறுகிய காலத்தினுள் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.
எனது அபிவிருத்தியைப் பார்த்து ஆச்சரியமைடைந்தனர். ஆனால் இன்றுள்ள நிலைமையை பாருங்கள்.
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு மக்களின் ஆணையைக் கோருவதற்காக தேர்தலை நடாத்துவோம் என்றவர்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இது மக்களுக்கு இவர்கள் செய்யும் பெரிய அநியாயமாகும்.12,000 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து அவர்களை விடுவித்துள்ளேன்.
ஆயுதங்களுடன், சயனைட் குப்பிகளுடன் நடமாடிய தமிழ் இளைஞர்களை இன்று பேனாவுடன் நடமாட வைத்துள்ளேன்.
இன்று பாதுகாப்பு படை வீரர்களையும் பயங்கரவாதிகளாக பார்க்கின்றனர் என்றார்.