பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பயணம் மேற்கொண்டது. பெஷாவரில் நடக்க இருந்த போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட மைதானத்திலிருந்து பஸ்சில் இந்த அணி வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.
அப்போது பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 போலீசார் உயிரிழந்தனர். இலங்கை அணி வீரர்கள் மசேலே ஜெயவர்த்தனே, குமார் சங்ககரா, அஜந்தா மெண்டிஸ், திலன் சமரவீரா, தரங்கா பரனவிதனா மற்றும் சமிந்தா வாஸ் ஆகிய வீரர்கள் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதலில் பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட லஸ்கர்-இ-ஜாங்கி என்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, அவர்களை போலீசாரும், ராணுவமும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்க படையுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய குவாரி அஜ்மல் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, அவன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் குவாரி அஜ்மல் கொல்லப்பட்டான்
இவன் லஸ்கர்-இ-ஜாங்கி தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆக இருந்தான். இவனுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு தலைவர் ஹக்கிமுல்லா மசூத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் 2013-ம் ஆண்டு நவம்பரில் கொல்லப்பட்டார்.
கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி பாகிஸ்தான் தலிபான் கமாண்டர் ஆசம் தபரிக் அவரது மகன் ஆகியோர் பத்திகாவில் கொல்லப்பட்டனர்.