ஜனாதிபதி மைத்திரி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் !

maithiriஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் சனிக்கிழமை இந்தியா செல்கிறார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

பதவியேற்று கடந்த ஒன்றரை வருடத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு செல்லும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

இலங்கை – இந்திய இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் உள்ளிட்ட தெற்காசிய வலய விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பு சந்திப்புகளின் போது கலந்துரையாடப்படவுள்ளன. 

இதேவேளை பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு வரும் 15 மற்றும் 16ம் திகதிகளில் இந்தியாவில் உள்ள கோவா நகரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெறாத வங்காளதேசம், பூட்டான், நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது