ரிட்டாவை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டாவை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று சந்தித்துள்ளார்.

cuzcgqmusaavtoi-jpg-large

இந்த சந்திப்பின் போது ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை வருகை தந்துள்ள ரிட்டா இஸாக்கி, இந்த மாதம் 20ஆம் திகதி வரை தங்கியிருந்து தற்போதைய நிலை, தேசிய பிரச்சினை, சமயங்கள் மற்றும் நாட்டின் சிறுபான்மையினர் ஆகியோர் விடயங்கள் குறித்து ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.