ஜனா­தி­பதி மைத்­தி­ரிக்கும் எனது கதிதான் ஏற்படப்போகிறது: மஹிந்த

mahindha-angry_Fotor
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை மிகவும் குறைந்த எண்­ணிக்­கை­யி­லான முஸ்­லிம்­களே ஆத­ரித்து வந்­தனர். எனது ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­களின் ஆத­ரவு அதி­க­ரித்­தது.

இதனைப் பொறுக்க முடி­யா­த­வர்­களே சதி­செய்து என்­னி­லி­ருந்தும் முஸ்­லிம்­களைப் பிரித்­தனர் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

நேற்­று­முன்­தினம் பத்­த­ர­முல்­லையில் உள்ள அவ­ரது காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற ‘முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி’யின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்­வின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

நான் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல எந்­தவோர் இனத்­துக்கும் அநி­யாயம் செய்­ய­வில்லை. இதே­வேளை, எனது அமைச்­ச­ர­வையில் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் அங்கம் வகித்­தார்கள். இன்று அவர்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சுற்­றி­யி­ருக்­கி­றார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரிக்கும் எனது கதிதான் ஏற்படப்போகிறது என்றார்.